"அமெரிக்க அதிபர் தேர்தலில் என் ஆதரவு.." உலகையே திரும்ப வைத்த புதின் அறிவிப்பு - இந்தியர்களுக்கு ஷாக்...வாய் பிளக்கும் அமெரிக்கர்கள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படுத்தியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்...
அமெரிக்காவும் ரஷ்யாவும் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொள்வது உலகம் அறிந்ததே...
இந்த சூழலில் வரும் நவம்பரில் அனைவரும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர்...
இந்தத் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்று ரஷ்ய அதிபர் புதின் வெளிப்படுத்தியுள்ளார்...
புதின் எப்போதும் அமெரிக்க அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து கிண்டலாக பதில் சொல்வது வழக்கம்...
கடந்த வருடம் கூட அமெரிக்க அரசியல் அமைப்பு அழுகி விட்டதாகவும்... ஜனநாயகம் பற்றி அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு பாடம் நடத்த முடியாது என்றும் விமர்சித்திருந்தார் புதின்...
இந்நிலையில் எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து பேசியுள்ள புதின், "அமெரிக்க அதிபர் பைடன் கமலா ஹாரிசை ஆதரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த நிலையில்...நாமும் அதையே செய்வோம்...கமலா ஹாரிசையே ஆதரிப்போம்" என்று கூறி விட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்...
மேலும் கமலா ஹாரிஸ் மற்றவர்களுடன் இணக்கமான உறவை கடைபிடிப்பதாகவும் புதின் சுட்டிக் காட்டினார்...
முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்யா மீது இதுவரை எந்த அமெரிக்க அதிபரும் விதிக்காத வகையில் பல பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில்...ஒருவேளை கமலா நன்றாக செயல்பட்டால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்...
முதலில் அமெரிக்க அதிபர் பைடன் மீண்டும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பைடனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார் புதின்...
பைடனை எளிதில் கணித்து விடலாம் எனவும் அவர் காரணம் தெரிவித்தார்...
ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட வேண்டாம் என வெள்ளை மாளிகை புதினுக்கு தெரிவித்திருந்தது...
அமெரிக்க வாக்காளர்களைக் குறி வைத்து ரஷ்யா தவறான ஆன்லைன் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாக பைடன் நிர்வாகம் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த சூழலில் ரஷ்ய அதிபர் புதின் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்...
அமெரிக்காவில் உள்ள வாக்காளர்களைத் தூண்டுதல், உக்ரைனுக்கான சர்வதேச ஆதரவைக் குறைத்தல், ரஷ்ய சார்பு கொள்கைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துதல் ஆகியவை தான் ரஷ்யாவின் திட்டம் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி குற்றம் சாட்டி இருந்தார்...
இந்நிலையில் புதின் கமலாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது...