பற்றி எரியும் போர் பூமி.. பாலஸ்தீன அதிபர் எடுத்த முடிவு.. இனிதான் முக்கிய கட்டமே

Update: 2023-10-22 05:26 GMT

எகிப்தின் கெய்ரோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "பாலஸ்தீனியர்களாகிய நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் தான் இருப்போம்..." என்றும், இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலும் காசாவை விட்டு வெளியேற ஒப்புக் கொள்ள மாட்டோம் எனவும் உறுதிபட தெரிவித்தார். வேறு இடத்திற்கு இடமாற மாட்டோம் என குறிப்பிட்ட அப்பாஸ், என்ன சவால்கள் வந்தாலும் எங்கள் நிலத்திலேயே உறுதியுடன் நிற்போம் என்றும் தெரிவித்தார்... பாலஸ்தீனியர்கள் மேற்குக் கரை மற்றும் ஜெருசலேமில் இருந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப் படுவதை கடுமையாக அவர் கண்டித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்