"இந்தியாவுக்கு எங்கள் ஆதரவு" - உலகநாடுகள் முன் நெற்றிப்பொட்டில் அடித்த அமெரிக்கா

Update: 2024-09-24 09:30 GMT

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா நீண்டகாலமாக ஆதரவு அளித்து வந்துள்ளதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். ஐ.நா. சபையில், எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், இதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்