வளர்ச்சி என்ற பெயரில் சுரண்டல்...கடலுக்குள் மூழ்கும் அபாயம் - இலங்கையில் பரபரப்பு

Update: 2024-01-27 11:39 GMT

இந்த போராட்டத்தில், மன்னார் மாவட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, மன்னார் பிரதான பாலத்தில் இருந்து தொடங்கிய பேரணி பிரதான வீதி வழியாக பஜார் பகுதியை சென்றடைந்தது. பின்னர் மன்னார் மாவட்டச் செயலகம் முன்பு ஒன்று கூடிய மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி கோரிக்கைகளை வலியுறுத்தினர். வளர்ச்சி என்ற போர்வையில் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலங்கள், அபகரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்