உலகை உலுக்கிய விமான விபத்து.. பறிபோனது 179 உயிர் - Runway-யிலேயே வெடித்த பயங்கர காட்சி
175 பயணிகள், 6 ஊழியர்களுடன் பாங்காக்கில் இருந்து பயணித்த ஜேஜு விமானம் தென்கொரியாவின் முவான் நகரில் தரையிறங்கும்போது தொழில்நுட்பக் கோளாறால் தீப்பிடித்து எரிந்தது... விமானமானது ஓடுபாதையில் இருந்து விலகி வேலியில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தீப்பிடித்து எரிந்து அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காட்சியளித்தது. இவ்விபத்தில் 179பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் வெடித்துச் சிதறும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.