மனிதர்களுக்கு 'நோ'..ரோபோவுக்கு 'யெஸ் ' - நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு

Update: 2022-05-31 12:05 GMT

சிங்கப்பூரில், தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால், பல நிறுவனங்கள், ரோபோக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளன. கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, சிங்கப்பூரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் முதல், தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கட்டுமானம், மருத்துவம் போன்ற துறைகளில், சிங்கப்பூர் பெரும்பாலும், வெளிநாட்டு தொழிலாளர்களையே நம்பியிருந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளால், வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்கள் வருவது பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, கட்டுமானம், உணவகம், கணக்கெடுப்பு, தூய்மை போன்ற பணிகளுக்கு பல நிறுவனங்கள் ரோபோக்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனை அரசும் ஊக்கப்படுத்தி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்