காசாவில் தண்ணீர், உணவு, மருந்து என அடிப்படைத் தேவைகளுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், முற்றுகையிடப்பட்ட காசாவிற்குள் எரிபொருள் வராவிட்டால் தங்கள் சேவை முடக்கப்படும் என ஐநா எச்சரித்துள்ளது.
பாலஸ்தீனிய விவகாரங்களுக்காக ஐநா நிறுவனம்,
உயிர்காக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவசரமாக எரிபொருள் தேவை என தெரிவித்துள்ளது. இருப்பு வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தீரும் தருவாயில் உள்ளதாகவும், மனிதாபிமான உதவி நிறுத்தப்படப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. காசாவிற்குள் எரிபொருளை அனுமதித்தால் அது ஹமாசால் கைப்பற்றக்கூடும் என கூறி இஸ்ரேல் எரிபொருள் அனுமதியைத் தடுத்து நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.