நாட்டை உலுக்கிய குவைத் தீ விபத்து - இந்தியர்களுக்காக ஆக்க்ஷனில் இறங்கி மோடி போட்ட அறிவிப்பு

Update: 2024-06-13 02:17 GMT

நாட்டை உலுக்கிய குவைத் தீ விபத்து - இந்தியர்களுக்காக ஆக்க்ஷனில் இறங்கி மோடி போட்ட அறிவிப்பு

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமரின் முதன்மை செயலாளர் பிரமோத் மிஷ்ரா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்ட மோடி, உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்