குவைத் தீ விபத்து தொடர்பான உதவிகளுக்கு தங்களை அணுகுவதற்கான தொலைபேசி எண்களை அயலக தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ளது.
குவைத்தில் நடந்த தீ விபத்தில் இந்தியர்கள் பலரும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பலரும் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த தமிழக முதலமைச்சர் விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர் தம் விபரங்களை பெற்று அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.