``அதிபர் மகன் குற்றவாளி... 25 ஆண்டுகள் சிறை..?'' மொத்தமாக நொறுங்கிய பைடன் சாம்ராஜ்ஜியம்

Update: 2024-08-03 11:39 GMT

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு நவம்பர் 13ல் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று அமெரிக்காவின் டெலாவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது...

2018 ஆம் ஆண்டு கைத்துப்பாக்கி வாங்கியது, போதைப் பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட 3 வழக்குகளில் அவர்

குற்றவாளி என கடந்த ஜூன் மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

3 வழக்குகளிலும் மொத்தம் 25 ஆண்டுகள் வரை ஹண்டர் பைடனுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

நவம்பர் 5 ல் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கு பிறகு சரியாக ஒரு வாரம் கழித்து நவம்பர் 13 ஆம் தேதி அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது. அமெரிக்க அதிபரின் மகன் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை செல்வது, வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்