நினைத்ததை சாதித்த இஸ்ரேல்.. மனித பேரழிவு.. அலறும் உலகம்.. போரில் புதிய டர்னிங் பாய்ண்ட்

Update: 2024-05-09 03:17 GMT

எகிப்துடன் எல்லையைப் பகிரும் காசாவின் ரஃபா எல்லையை இஸ்ரேல் தரைப்படை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது...

vovt

காசாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான எல்லையில் உள்ள 14 கிலோமீட்டர் நீளமுள்ள குறுகிய பகுதி இது... எகிப்திலிருந்து காசாவிற்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கான ஒரே ஒரு பாதை இது மட்டும் தான்... காசா பகுதியையும் எகிப்தையும் இணைக்கும் முக்கிய பாதையாக இருப்பதால் ரஃபா கிராசிங் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது... ரஃபா எல்லையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததன் மூலம் எகிப்தில் இருந்து ஹமாஸ் ஆயுதங்களைக் கடத்துவதைத் தடுக்கவும், இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் அதிக எண்ணிக்கையில் எகிப்துக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கவும் இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது... ஹமாஸின் எஞ்சியிருக்கும் ராணுவ திறன்களை அழிப்பதற்கான மிக முக்கியமான படி இது எனவும், ஹமாஸின் சமீபத்திய போர்நிறுத்த முன்மொழிவு இஸ்ரேலின் அத்தியாவசிய கோரிக்கைகளை விட முக்கியத்துவம் குறைவாக உள்ளதென்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்... இந்த சூழலில் ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்டன், ரஃபாவில் இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாது என்று எச்சரித்தார். இஸ்ரேலின் ரஃபா மீதான தாக்குதல் ஒரு மனித பேரழிவாக இருக்கும் என்று ஐ.நா தலைவர் எச்சரித்துள்ளார்... ரஃபா எல்லை இஸ்ரேல் கட்டுப்பட்டிற்குள் வந்த நிலையில், காசாவிற்குள் செல்ல வேண்டிய நிவாரண உதவி லாரிகள் எல்லையிலேயே அணிவகுத்து நிற்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்