இந்தியா-இலங்கை இடையே பயணியர் படகு போக்குவரத்து சேவை - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-03-04 05:06 GMT

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதற்கிடையே, பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதியுடன் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது சீதோஷண நிலை சீரடைந்த பிறகும், இரு நாடுகளுக்கு இடையே பயணியர் படகு போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்படாதது இரு நாட்டு மக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தற்போது கடலில் பயணிக்க சுற்றுலா பயணிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் சீதோஷ்ண நிலை சாதகமாக உள்ளதால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணியர் படகு போக்குவரத்து சேவையை மத்திய அரசு மீண்டும் விரைந்து தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக, தமிழக சிறு துறைமுகங்கள் துறை சார்பில் மத்திய அரசுக்கு தாம் கடிதம் எழுதி உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்