ஊர் சுற்றி பார்க்க வேற லெவல் ஸ்பாட்...ஆஸ்திரியா நாட்டுக்கு கொண்டாட்ட பயணம்...
ஊர் விட்டு டூர் வந்து பகுதில இன்னைக்கு நாம சுத்தி பாக்க போற நாடு… இயற்கைகளின் பேரரசனாக விளங்கும் ஆஸ்த்ரியா…
பொதுவா செயற்கையான விசயங்களை வச்சு தான்… ஏகப்பட்ட எண்டர்டெயின்மெண்ட்ட கிரியேட் பண்ணுவாங்க… ஆனா எண்டர்டெயின் குடுக்குறதே இங்க இருக்க இயற்கை வளங்கள் தான்… அதாவது… வெயிலை தனிக்க சுவிட்சர்லாந்து , தண்ணில குத்தாட்டம் போட தாய்லாந்து… கடல்ல ரசிக்க இங்கிலாந்துனு ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு நாடு தேடி போயிட்டு இருக்கோம்… ஆனா இந்த எல்லா இயற்கை அம்சமும் ஒரே இடத்துல இருக்குனா அது ஆஸ்த்ரியா தாங்க…
யப்பா… விட்டா விடிய விடிய ஊரை வருனிச்சுட்டு இருப்ப போலயே… சீக்கிரம் சுத்தி காட்டுனு… திட்டுற உங்க மைண்ட் வாய்ஸ்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன்… அதுனால ஊருக்குள்ள இறங்கி அலப்பறைய ஸ்டார்ட் பண்ணலாம் வாங்க…
சின்றாசு பிளைட்ட கிளப்புயா...
ஆஸ்ட்ரியால நுளைஞ்சதும் முதல்ல நாம பாக்க போற இடம்…
லண்டன்ல இருக்க ஈஃபில் டவர்ல ஏறி பாத்தா ஒட்டு மொத்த இங்கிலாந்தையே பாக்கலாம்னு… நான் சின்ன வயசுல இருக்கும் போது… பெரியவங்க சொல்லுவாங்க… நான் பெரியவனா ஆனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது அது உருட்டுனு....
ஆனா அந்த உருட்ட சாத்தியப்படுத்திருக்கு schafberg மலை….
மலைமேல இருந்து நாட்டோட ஒட்டுமொத்த ரம்மியத்த ரசிக்கலானு சொன்னதால... கூட்சு வண்டியில ஜன்னல் ஓரமா ஒரு சீட்ட புடிச்சி உக்காந்த உடனே வண்டி மலமேல போக போக…
வழி எல்லாம் இயற்கையின் படைப்புகள் நம்மோட கண்ணுக்கு விருந்தளிக்க,கொஞ்ச நேரத்துலயே மலைமேல வந்தாச்சு...
வாவ் மேல நின்னு பாக்கும் போது… கடவுள் இந்த நாட்ட அழகா செதுக்கி வச்சுட்டாருனுதான் சொல்லனும்… மலை ஓரத்துல நதிய உரசிட்டு இயற்கையோட இயற்கையா ஒன்றி இருக்குற வீடுகள பாக்குறப்போ… ரெண்டு கண்ணு பத்தாது தலைக்கு பிண்ணாடி கூட ரெண்டு கண்ணு படைச்சுருக்கலாம்னு தோனும்…
குடுத்த காசுக்கு வொர்த் தான் பா....
மலைய கிரிவலமா சுத்தி முடிச்சு அடுத்ததா போக போற இடம் தான் BAD Gastein...
ட்ரைன்ல டிராவல் பண்ண நம்மள.... இப்போ ரோப் கார்ல சிட்டா பறக்க வச்சு… பனி பொலிவை ரசிக்க வைக்குறதுக்காவே இப்டி ஒரு ஸ்பாட்ட உருவாக்கி வச்சுருக்காங்க…
ஆனா ஒன்னுங்க… எப்பேர் பட்ட மெண்டல் பிரஸ்ஸர்ரா இருந்தாலும்… இந்த ஸ்பாட்ல குட்டி டிராவல் பண்ணி பாருங்க… பிரஸ்ஸர் எல்லாம் பனியா உருகிடும்…
ஐரோப்பா கண்டத்துலயே மிகப்பெரிய பனிமலை இது தான்... WINTER WONDERLAND-னு அழைக்கப்படுற இந்த ஸ்பாட்ல பனிபொழிவு வழக்கத்த விட அதிகமா இருக்குறதுனால ஊருக்கே வெள்ளை அடிச்ச சும்மா பல பலனு இருக்குமாம்…
அந்த டைம்ல லாம்... ஸ்கேட்டிங் வீரர்கள் கால்ல ஸ்கேட் போர்ட மாட்டிகிட்டி விறுட்டு விறுட்டுனு சீறி பாய ஆரம்பிச்சுடுவாங்க....