அமெரிக்க அதிபர் ஆகிறாரா கமலா ஹாரிஸ்? - மேடையில் ஓப்பனாக சொன்ன பைடன்

Update: 2024-07-18 02:23 GMT

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரங்களில் ஜோ பைடன் தடுமாற, அவரது ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவில் நிகழ்ச்சியொன்றில் பேசியிருக்கும் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஒரு சிறந்த துணை அதிபர் மட்டுமல்ல, அவர் அமெரிக்காவின் அதிபராகவும் இருக்கலாம் என்றார். பைடனின் இந்த பேச்சு வேட்பாளரை மாற்ற தெரிவிக்கும் இசைவா...? என்ற கேள்வி எழுகையில், கூட்டத்தினர் மத்தியில் பேசியிருக்கும் பைடன் தனது இரண்டாவது ஆட்சிகாலத்தில் முதல் 100 நாட்களில் செய்ய வேண்டிய திட்டங்களை போட்டு வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை தனதாக்குவார்.

Tags:    

மேலும் செய்திகள்