பூனையை தேடிப் போய்... பூமிக்குள் போன மூதாட்டி... கதிகலங்கி நின்ற பேத்தி - அதிர வைக்கும் காட்சி
- அமெரிக்காவில் சாலையோரத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்து மாயமான மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர். பென்சில்வேனியா மாகாணத்தில், 64 வயதான மூதாட்டி ஒருவர், மாயமான செல்ல பிராணி பூனையை, தமது பேத்தியுடன் சென்று பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது, சாலையோரம் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அவர் விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த பள்ளம் அவரகே மூதாட்டியின் காரும் பேத்தியும் நின்றிருந்தனர். மூதாட்டி மட்டும் மாயமாகியிருந்தார். இதனால் அவர் அந்த திடீர் பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து, மூதாட்டியை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.