நவம்பர் மாதத்திற்குள் 370 வழக்கமான ரயில்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுப் பெட்டிகளை சேர்க்க ரயில்வே துறை இலக்கு வைத்துள்ளது. பொது வகுப்பு பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ரயில் பயணம் எளிதாகும். ஜூலை மற்றும் அக்டோபர் இடையே, 583 புதிய பொதுப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, 229 வழக்கமான ரயில்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் ஏசி அல்லாத பெட்டிகளை, அதாவது பொது பெட்டிகளை சேர்க்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு தினமும் சுமார் 8 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணிக்க முடியும்.
இவற்றில் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயணிகள் வசதிகளை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ரயிலிலும் குறைந்தபட்சம் நான்கு பொதுப் பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன.