காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவிப்பு... எஞ்சி இருக்கும் பதவிக் காலத்தில் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த உள்ளதாக விளக்கம்... இந்த வார இறுதியில் மக்கள் மத்தியில் தனது முடிவு குறித்து பேச உள்ளதாகவும் தகவல்...
- ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளராக, கமலா ஹாரிஸை தேர்வு செய்ய முழு ஆதரவு என ஜோ பைடன் அறிவிப்பு... டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது எனவும் அதிரடி...
- அதிபர் தேர்தலில் போட்டியிட ஜோ பைடன் தகுதியற்றவர் என குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கடும் தாக்கு... கமலா ஹாரிஸை தோற்கடிப்பது மிகவும் எளிது எனவும் விமர்சனம்...
- மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது... நாளை மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
- நீட், சாதிவாரி கணக்கெடுப்பு, மதுரை எய்ம்ஸ் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தல்... திறந்த மனதுடன் விவாதிக்க அரசு தயார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி...
- 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் தி.மு.க.... அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு விரிவான ஆலோசனை...
- திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி தான் ராமர் ஆட்சி...புதுக்கோட்டையில் நடந்த கம்பன் பெருவிழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு...
- தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவது குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்... தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி...
- மத்தியில் நிலையான அரசு இல்லை... விரைவில் ஆட்சி கவிழும்... மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து...
- தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைனில் உடனடியாக கட்டட அனுமதி பெறும் நடைமுறை.... இன்று தொடங்கி வைக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்...
- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்... விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு வரும் 27ஆம் தேதி வரை கலந்தாய்வு...
- வன்முறை பதற்றத்திற்கு மத்தியில் வங்கதேசத்தில் இருந்து முதல்கட்டமாக 49 தமிழக மாணவர்கள் சென்னை வருகை... அரசு ஏற்பாட்டில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு... இதுவரை 4500க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாக தகவல்...
- சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சிறந்த மருத்துவர்கள் மூலம் சிறப்பு வகுப்பு எடுக்க உள்ளதாக கூறி நூதன மோசடி... நான்கரை லட்ச ரூபாய் மோசடி செய்த மருத்துவ மாணவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார்...
- இருசக்கர வாகனத்தில் சென்ற போது, செல்போன் வெடித்ததில் நிலைதடுமாறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு... உடன் சென்றவர் படுகாயம்... ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அதிர்ச்சி சம்பவம்...
- டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த முதல் போட்டியில், கோவை அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி... மற்றொரு போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அசத்தல்...
- டி.என்.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன... நெல்லையில் இரவு 7.15 மணிக்கு போட்டி தொடங்குகிறது...