"நம் மண் சார்ந்த வெப்சீரிஸ் தொடர்களுக்கு இது ஆரம்பப்புள்ளி" - நடிகர் ஆர்யா | The Village

Update: 2023-11-18 05:25 GMT

ஆர்யா நடித்துள்ள 'தி வில்லேஜ்' வெப்சீரிஸ் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில், 'தி வில்லேஜ்' வெப்சீரிஸ் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் மிலின் ரா, நடிகர்கள் ஆர்யா, ஜான் கொக்கேன், பூஜா உள்ளிட்ட வெப்சீரிஸ் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர்யா, நமது மண் சார்ந்த கதையாக வெப் சீரிஸ் தொடர்களுக்கான ஆரம்பப்புள்ளியாக இது இருக்கும் என்று தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்