சிக்காமல் டிமிக்கி கொடுத்த பிரபல ரவுடி..ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்..சினிமாவை மிஞ்சிய சம்பவம்
- திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சியை சேர்ந்த ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன்,
- மீது கொலை, அடிதடி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 53 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் கூலிப்படையாகவும் ஜெகன் செயல்பட்டு வந்துள்ளார்.
- இந்நிலையில் சிறுகனூர் அருகே சனமங்கலம் வனப்பகுதியில் ஆடு மற்றும் பன்றி வளர்க்கும் தொழிலாளர்களிடம் சிலர் கத்தியை காட்டி மிரட்டி, ஆடு மற்றும் பன்றிகளை பறித்து சொல்வதாக திருச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
- அதன்பேரில் திருச்சி எஸ்பி வருண்குமார் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை, சனமங்கலம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அப்போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி ஜெகன் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார்.
- போலீசார் விரட்டி பிடிக்க முயன்றபோது, பெட்ரோல் மற்றும் நாட்டு வெடிகுண்டு வீசி வீட்டு தப்பமுயன்றார். போலீசார் விரட்டிச்சென்று பிடித்தபோது அரிவாளால் தாக்கியுள்ளார். அப்போது தற்காப்பிற்காக போலீசார் இரண்டு ரவுன்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக எஸ்பி வருண்குமார் தெரிவித்தார். காயம் அடைந்த ரவுடி ஜெகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இறந்ததாகவும் அவர் கூறினார்.நடைபெற்றது என்கவுன்ட்டர் அல்ல, தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு எனவும் தெரிவித்துள்ளார்.