அமைச்சர் உதயநிதிக்காக கமல் சொன்ன அந்த ஒரு வார்த்தை | Minister Udhayanidhi Stalin | Kamal Haasan
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் பேசுபொருளான நிலையில், சனாதனம் குறித்து கருத்து தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு என 'X' தளத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். உதயநிதியின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால் சனாதன தர்மப்படி விவாதிக்க வேண்டுமே தவிர, அச்சுறுத்தல், சட்டரீதியான மிரட்டல் மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக அவரது வார்த்தைகளை திரித்து பேசுதல் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். ஆரோக்கியமான விவாதங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் பாதுகாப்பான இடமாக இருந்து வருவதாக கமல்ஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.