எவ்வளவோ சொல்லியும் கேட்காத இளைஞர் - செய்யக்கூடாத கேவலத்தை செய்து சிதைந்து போன முகம்

Update: 2024-11-02 06:03 GMT

எவ்வளவோ சொல்லியும் கேட்காத இளைஞர் - செய்யக்கூடாத கேவலத்தை செய்து சிதைந்து போன முகம்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் முகம் சிதைக்கப்பட்டு, வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடி கிழக்குக் கடற்கரை சாலை நம்புதாளை முருகன் கோவிலில் ராட்டினம் போட்டிருந்த இளைஞர் முத்துக்குமாரை காரில் ஆயுதங்களோடு வந்த கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. அதனை தடுக்க வந்த முத்துக்குமாரின் தாய் மற்றும் சிலரை தாக்கிய கும்பல் தப்பி ஓடியது. அங்கு வந்த தொண்டி போலீசார், முத்துக்குமார் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, கொலை செய்துவிட்டு ஓடிய கும்பலை சினிமா பாணியில் துரத்தியது. கருங்கவயல் பகுதியில் காரை நிறுத்தி விட்டு தப்பிய கும்பலில் இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த சரவணனின் சகோதரியுடன் முத்துக்குமார் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும், பல முறை கண்டித்தும் முத்துக்குமார் கள்ளத்தொடர்பை விடாததால், சரவணன் கூலிப்படையோடு முத்துக்குமாரை தீர்த்துக்கட்டியிருப்பதாக கூறப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்