கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை - அச்சத்தை கிளப்பிய மேற்குவங்க ஆளுநர்
மேற்குவங்க மாநிலம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என, ஆளுநர் ஆனந்தா போஸ் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய அரசின் நடவடிக்கைகளால் பெண்கள் பலவிதங்களிலும் இன்னல்களை சந்தித்து வருவதாகவும், குண்டர்களைக் கண்டு அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தில், சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆனந்தா போஸ் குறிப்பிட்டார்.