தெலுங்கானாவை புரட்டிப்போட்ட கனமழை... இழுத்துச் செல்லப்பட்ட தண்டவாளம்.. கோர தாண்டவம் ஆடிய இயற்கை
தெலங்கானாவில் கனமழை, வெள்ளத்தில் ரயில் பாதை அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மெகபூபாபாத் மாவட்டம் கல்லகுச்சிபள்ளி கிராமத்தில் மழையை தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து சென்றதில் தண்டவாளம் இழுத்துச் செல்லப்பட்டதோடு, சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் அம்மார்க்கமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் விஜயவாடா மற்றும் தெலுங்கானா இடையிலான ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை சேதம் காரணமாக சுமார் 20 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.