கோவிலில் செருப்பு அணியத் தடை - அரசியல் கட்சிகளுக்கும் `நோ' அனுமதி... உயர்நீதிமன்றம் அதிரடி

Update: 2024-01-03 03:22 GMT

கேரளாவில் புகழ் பெற்ற திருச்சூர் பூரத்தையொட்டி, வடக்குநாதர் கோவிலில் செருப்பு அணிந்து செல்ல கேரளா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், ஜி.கிரீஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, திருச்சூர் பூரம் நடைபெறும் நாட்களில் கோவிலின் மரபுகளின்படி வழிபாடுகள் நடக்க வேண்டும் என்றும், செருப்பு அணிந்து வருபவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேக்கிங்காடு மைதானத்தில் பிளாஸ்டிக் இல்லாததை உறுதி செய்யுமாறு கொச்சி தேவசம் போர்டு செயலாளருக்கும், மைதானத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துமாறு மாநகராட்சி செயலருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி விளம்பரப் பலகைகள், கொடிகளை அமைக்கக் கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்