வயநாட்டில் மீண்டும் ஆபத்து | wayanad landslide

Update: 2024-08-21 04:26 GMT

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டகை பகுதிகளுக்கு வெளியூர் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், தமிழகம், கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவர்களும் பார்வையிட வர தொடங்கினர். நிலச்சரிவால் பாதி சேதமடைந்த கட்ட‌டங்கள் இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்து இருப்பதால், வெளியூரை சேர்ந்தவர்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முண்டகை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு செல்லும் பாலத்தின் நுழைவு பகுதியில் போலீசார் தடுப்புகளை வைத்து கண்காணித்து வருகின்றனர். தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு படைகளை சேர்ந்த பணியாளர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள், ஊடகவியலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகஸ்ரீ கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்