ஊ.ம.தலைவரிடமே லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டும் வார்டு உறுப்பினர்.. தீயாய் பரவும் வீடியோகாட்சிகள்

Update: 2024-01-08 07:47 GMT

திருவண்னாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள அத்திமலைப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சங்கர். இவருடைய செக் பவர் கடந்த 2022ஆம் ஆண்டு பயனாளிகளிடம் வீடு கட்ட பணம் கேட்ட புகாரில் பறிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு குறித்து அத்திமலைப்பட்டு ஊராட்சி வார்டு உறுப்பினர்களிடம் தாசில்தார் விசாரணை நடத்த இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாசில்தார் விசாரணைக்கு முன்பே வார்டு உறுப்பினர்களை சந்தித்த சங்கர், விசாரணையில் தனக்கு ஆதரவளிக்கும் படி கேட்டதாக தெரிகிறது. இதற்கு வார்டு உறுப்பினர்கள் ஒரு லட்ச ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது

Tags:    

மேலும் செய்திகள்