அக்.30 முதல் நவ.2 வரை காத்திருப்பு போராட்டம் - போக்குவரத்து தொழிற்சங்கமான சிஐடியு முடிவு

Update: 2023-10-26 06:32 GMT

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தீபாவளியின் போது போனஸ் வழங்குவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2020 முதல் 2022 வரை கொரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு 10% போனஸ் மட்டுமே வழங்கி வந்த நிலையில் தற்போது மத்திய அரசின் போன சட்ட திருத்தத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச கூலியை கணக்கில் கொண்டு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று சிஐடியு சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. கடந்த வாரம் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அரசுக்கும் நிர்வாகத்திற்கும் 20% போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் போனஸ் குறித்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்னிறுத்தியும் வருகின்ற அக்டோபர் 30 31 நவம்பர் 1 ஆகிய மூன்று நாட்கள் 12 மணி நேரம் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என கூட்டமைப்பு தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளது. இந்தப் போராட்டம் சென்னை பல்லவன் சாலையில் அமைந்துள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பாக தமிழக முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்ளக்கூடிய போராட்டம் என்பது நடைபெற உள்ளது. அரசும் கழக நிர்வாகம் உடனடியாக தலையிட்டு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸ் குறித்து பேச்சுவார்த்தை உடனடியாக நடத்தி சுமூகமான ஒரு நிலையை எட்ட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் விரும்புகிறது. ‌‍ மேலும் போக்குவரத்து கழகங்களில் காண்ட்ராக்ட் அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும், 15ஆவது ஊதியம் போன்ற பேச்சுவார்த்தை உடனடியாக துவக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 2015 நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது இந்த அகவிலைப்படி உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் என்பது துவங்க உள்ளது போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த அரசு உடனடியாக இந்த பிரச்சனைகளை தலையிட்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் இன்றைய தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை ஆட்சி பொறுப்பேற்ற நூறு நாட்களில் தீர்த்து வைப்பேன் என்ற கோரிக்கையை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

தீபாவளிக்கு 20 சதவீத போனஸை வழங்க வலியுறுத்தி மூன்று நாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ள போக்குவரத்து ஊழியர்கள்

காண்ட்ராக்ட் அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்வதை கைவிட வேண்டும் 15 வது ஊதிய பேச்சுவார்த்தை உடனடியாக துவக்க வேண்டும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 30 முதல் நவம்பர் 1ம் தேதி வரை மூன்று நாட்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போக்குவரத்து தொழிற்சங்கமான சிஐடியு முடிவு .

Tags:    

மேலும் செய்திகள்