சென்னை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விநாயகர் சதுர்த்தி வரும் 7 ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வழிபாட்டிற்கு பின் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில்
பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத
இரசாயன சாயம்/ ண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் தவறாமல் பின்பற்றுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்
ஜகடே வேண்டுகோள் விடுத்துள்ளார்.