பழத்திற்கு ஆசைப்பட்டு பலியான 3 குழந்தைகள்..! விழுப்புரத்தில் பேரதிர்ச்சி | Viluppuram
திண்டிவனம் அருகே நீரில் மூழ்கி மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோனேரிகுப்பம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்த சஞ்சய், பிரியதர்ஷினி மற்றும் சுபலட்சுமி ஆகிய மூன்று மாணவர்களும் ஆற்றைக் கடந்து சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மூன்று பேரின் சடலங்களையும் மீட்ட போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.