படுவேகத்தில் வந்த மாணவர்கள் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து பரபரப்பு சிசிடிவி காட்சி
நெல்லை, சேரன்மகாதேவியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த கல்லூரி மாணவன் அப்துல் மாலிக் மற்றும், நாகர்கோவிலை சேர்ந்த ஹரிஹரன் ஆகியோரது இருசக்கர வாகனங்கள் யூனியன் அலுவலகம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..