Lorry Accident || அசுர வேகத்தில் வந்த டிப்பர் லாரி..! பைக் மீது மோதி பயங்கர விபத்து..

Update: 2025-04-26 14:09 GMT

சவுடு மண் ஏற்றி சென்ற லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சவுடு மண் ஏற்றி சென்ற லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். ஊத்துக்கோட்டையில் இருந்து சவுடுமண் ஏற்றிக்கொண்டு பெரியபாளையம் நோக்கி சென்ற டிப்பர் லாரி, பாலவாக்கம் பகுதியில் பைக்கில் சென்ற கார்த்திக் என்பவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்