ஒற்றை மெசேஜ் வந்ததும் பள்ளியில் குவிந்த பெற்றோர் - திருச்சியில் பரபரப்பு
- திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை சுமார் 11 மணிக்கு பள்ளி நிர்வாகத்தின் இ-மெயில் முகவரிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக அனைத்து மாணவர்களையும் வெளியேற்றி, எதிரே உள்ள மைதானத்தில் அமர வைத்தனர். பெற்றோருக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஏராளமான போலீசார் மாணவர்களை பாதுகாப்பாக பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், பள்ளி வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களாக திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளிகள், தங்கும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வரும் நிலையில், மீண்டும் ஒரு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.