மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழையால், குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 17ம் தேதி ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தைத் தொடர்ந்து, ஒரு வார தடைக்கு பின் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், நேற்றிரவு குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனிடைய தடுப்புகள் அமைத்து, இரவு முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீர்வரத்தைப் பொறுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.