குரூப்-2ஏ... TNPSC வெளியிட்ட அறிவிப்பு

Update: 2024-04-09 10:10 GMT

நேர்காணல் அல்லாத குரூப்-2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 151 குரூப்-2 மற்றும் 2 ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதில், 161 இடங்கள் நேர்முகத் தேர்வைக் கொண்ட பணியிடங்களாகவும், 5 ஆயிரத்து 990 காலி இடங்கள் நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களாகவும் பிரிக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இதற்கான முதல்நிலைத் தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற சுமார் 50 ஆயிரம் பேர், முதன்மைத் தேர்வை எதிர்கொண்டனர். தொடர்ந்து, குரூப்-2 நேர்முகத் தேர்வு கொண்ட பணியிடங்களுக்கான முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

இந்நிலையில், நேர்காணல் அல்லாத குரூப்-2 ஏ பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 1 பணியிடத்திற்கு இரண்டு பேர் வீதம், சுமார் 14 ஆயிரத்து 500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்