பெண்களுக்கு ஓர் இனிப்பான செய்தி - "நிதி ஒதுக்கிய தமிழக அரசு"

Update: 2024-11-09 12:16 GMT

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் செயல்படும் சுய உதவி குழுக்களுக்கு 25.83 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிதி ஆதாரத்தை

மேம்படுத்தி,அவற்றின் பொருளாதாரத் தேவைகளை

நிறைவு செய்யும் வகையில் தகுதியுள்ள குழுக்களுக்கு

சுழல் நிதி வழங்கப்படுகிறது.

6 மாதங்கள் நிறைவடைந்த சுய உதவிக் குழுக்களுக்கு

சமுதாய முதலீட்டு நிதி மூலம், 1 இலட்சத்து 50 ஆயிரம்

ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

2024-25க்கான நிதியாக, தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் செயல்படும் ஆயிரத்து 209 சுய உதவிக் குழுக்களுக்கு, 1.81 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்க, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

17 மாவட்டங்களில் செயல்படும் ஆயிரத்து 731 சுய உதவிக் குழுக்களுக்கு 25.83 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்