அரசே வழங்கும் இலவச வீடுகள்...கலைஞரின் கனவு இல்லம் - தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

Update: 2024-11-21 07:13 GMT

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.கலைஞரின் கனவு இல்லம் 2024-25 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வீடுகள் அனைத்தும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் ஏற்கனவே, 300 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும், 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வீடுகளின் கட்டுமானத்திற்கேற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஊரக குடியிருப்பு பழுதுபார்க்கும் திட்டத்தின் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கும் பணிகளுக்காக ஏற்கனவே 150 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 450 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளங்கள், ஊருணிகள் புனரமைத்தல் திட்ட பணிகளுக்காக 347 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்