"வயதுக்கு மரியாதை கொடுங்க..!" வேளாண் துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2024-11-14 14:32 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சார்பில் வேளாண் கல்லூரி மாணவர்கள் டிஜிட்டல் பயிர் சர்வே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி டி சி கண்டிகை பகுதியில் உதவி வேளாண்மை இயக்குநர் பிரேம் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து கல்குவாரி அமைந்துள்ள பகுதியில் சர்வே பணியில் ஈடுபட்டு இருந்தனர்.இதற்குக் கல்குவாரியின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உதவி இயக்குநரைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த விவசாயிகள் வேளாண்மைத் துறை அதிகாரிக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே உதவி இயக்குநரைத் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகின்றன

Tags:    

மேலும் செய்திகள்