திருப்பூரை அதிர வைத்த போலி அமலாக்கத் ED ரெய்டு

Update: 2024-02-07 02:47 GMT

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே நூல் கடை நடத்தி வரும் அங்குராஜ் என்பவரிடம் வாட்ஸ்-அப் மூலம் அறிமுகமான விஜய் கார்த்திக் என்பவர், தனது நிறுவனத்தின் தொழில் தேவைக்காக பணம் தேவைப்படுகிறது என்றும் அந்த பணத்தை இரட்டிப்பாக தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். இதை நம்பிய அங்குராஜ் தனக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் ஒரு கோடியே 69 லட்ச ரூபாய் வசூலித்து, விஜய் கார்த்திக்கிடம் வீடியோ கால் மூலம் காண்பித்துள்ளனர். சிறிது நேரம் கழித்து அங்குராஜின் கடைக்கு வந்த 5 பேர் தங்களை அமலாக்க துறை அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு விசாரித்து, ஒரு கோடியே 69 லட்சத்தை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து நான்கு தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார், வழக்கில் சம்பந்தப்பட்ட விஜய் கார்த்தி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 88 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், வழக்கில் தலைமறைவாக இருந்த பிரதீஷ், கோடீஸ்வரன்,போலி பத்திரிகையாளர் ஜாகீர் அப்பாஸ் உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்து, கார், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்