"அய்யோ என் ரெண்டு புள்ளைங்களும் போச்சே" - ஒரு தாய் பார்க்க கூடாத காட்சி

Update: 2024-12-09 05:10 GMT

சிவகங்கை அருகே கோவில் குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

திருக்கோஷ்டியூர் கோவில் குளத்தின் படித்துறையில், சிறுவர்கள் ஆடை, சைக்கிள் இருப்பதை கிராமமக்கள் பார்த்துள்ளனர். விசாரணையில் அந்த சைக்கிள் ஜெயலெட்சுமி என்பவரின் மகன்கள் விஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணா உடையது என்பது தெரியவந்ததை அடுத்து, பெற்றோரிடம் விசாரித்துள்ளனர். சிறுவர்கள் இருவரும் வீட்டிலும், வெளியிலும் இல்லாத நிலையில், கோயில் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், 2 சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீன்பிடிக்கச் சென்று சகோதரர்கள் 2 பேர் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திருக்கோஷ்டியூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்