ஈரோடு மாவட்டம் பவானி அருகே, இடி விழுந்து குடிசை வீட்டில் தீப்பற்றியது. குடிசை வீட்டில் இருந்த, அம்மாப்பேட்டை ஒண்டிக்காரன் தோட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், அவரது மனைவி மற்றும் மகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த உடைமைகள் மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம், தீக்கிரையானது.