மொத்தமாக மாறப்போகும் தூத்துக்குடி..- 36,238 கோடியில் வரப்போகும் செம்ம பிளான்
தூத்துக்குடியில் அமைய உள்ள பசுமை ஹைட்ரஜன் யூனிட் ஆலைக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.
சிங்கப்பூரை சேர்ந்த செம்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பசுமை ஹைட்ரஜன் யூனிட்டு தூத்துக்குடியில் அமைய உள்ளது. 36 ஆயிரத்து 238 கோடி ரூபாய் மதிப்பில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த ஆலை மூலம் தூத்துக்குடி பகுதியில் ஆயிரத்து 511 வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பச்சை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மற்றும் ஜப்பான் போன்ற சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி திறன் ஆகியவற்றின் மையமாக தூத்துக்குடியில் நிலைநிறுத்தும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய தொழிற்சாலைக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.