தானாக மூடிய பிரபல நகைக்கடையின் கதவு...உள்ளே சிக்கி தவித்த மக்கள் - அரண்டு நின்ற குழந்தைகள்

Update: 2024-09-18 02:55 GMT

தூத்துக்குடியில் பிரபல நகைக்கடையின் ஷட்டர் தானாக மூடியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டபிள்யூ.சி.சி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையின் ஷட்டர் தீடீரென தானாக மூடிக்கொண்டது. ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஷட்டரை உடைக்க முயன்றனர். பின்னர், ஷட்டரை ஓரளவு மேலே தூக்கி வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் மீட்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்