கடலூரை பரபரப்பாக்கிய சம்பவம்...ஒன்று கூடிய பாமகவினர், மக்கள்...கைது.. பதற்றம்.. அதிர்ச்சி
கடலூரை பரபரப்பாக்கிய சம்பவம்...ஒன்று கூடிய பாமகவினர், மக்கள்...கைது.. பதற்றம்.. அதிர்ச்சி
பாமக நிர்வாகியை விடுவிக்கக் கோரி கடலூர் புதுநகர் காவல் நிலையத்தை பாமகவினரும், பொதுமக்களும் முற்றுகையிட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் அருகே வடக்கு ராமாபுரம் ஊர் பெயர்ப்பலகை சேதப்படுத்திய வழக்கில், வண்டிக்குப்பத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். இதைக்கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில், பாமக மாநில செயற்குழு உறுப்பினரான தனசேகரன் என்பவர், மற்றொரு சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக வீடியோ பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, விசிகவினர் அளித்த புகாரின் பேரில் தனசேகரனை போலீசார் கைது செய்து விசாரணைக்காக புதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் மற்றும் தனசேகரனின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.