திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் அண்ணாமலையார் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வழக்கம். அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான இன்று, அதிகாலை முதலே, தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநில பக்தர்களும் திரண்டனர். அதிகாலை 4.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார்-உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் 2 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.