கோவிலை இடித்த அதிகாரிகள்.. கொட்டும் மழையில் பொதுமக்கள் எடுத்த முடிவால் திருவள்ளூரில் பரபரப்பு | Thiruvallur
திருவள்ளூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் போலீஸார் பாதுகாப்புடன் இடித்தபோது,எதிர்ப்பு தெரிவித்து, கொட்டும் மழையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
புல்லரம்பாக்கம் கிராமத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக கிருஷ்ணர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் சாலையின் நடுவே இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசர் குவிக்கப்பட்டு, பாதுகாப்புடன் கோவிலை இடிக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்
திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டனர்.