"நாப்கினுக்கு GST நியாயமா..?" கேள்வி கேட்ட பெண்ணை தாக்கிய பாஜகவினர் - அதிர வைக்கும் வீடியோ

Update: 2024-04-12 14:22 GMT

"நாப்கினுக்கு GST நியாயமா..?" கேள்வி கேட்ட பெண்ணை காது கூச திட்டி ... உள்ளே புகுந்து தாக்கிய பாஜகவினர் - அதிர வைக்கும் வீடியோ

#ElectionCommission #LokSabhaElections2024 #Thiruppur #BJP #TNPolice #ElectionWithThanthiTV

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் பிரசாரத்துக்கு வந்த பாஜகவினரிடம் ஜிஎஸ்டி குறித்து பெண் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அந்த பெண்ணை பாஜகவினர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவரை தகாத வார்த்தைகளால் பாஜகவினர் பேசிய நிலையில், இதனை வீடியோவாக அவர் எடுத்துள்ளார். அப்போது, செல்போனை பாஜகவினர் பறிக்க முற்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில் வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்