`அய்யய்யோ.. அலறிய கர்ப்பிணி.. கையை விட்டு குழந்தையை எடுத்த டாக்டர்' - கடைசியில் வலிப்பு வந்து துடித்து நின்ற உயிர்
திருப்பத்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரது மனைவி துர்காதேவி பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 10 ம் தேதி அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அன்று இரவே அவருக்குப் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்த துர்காதேவிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் ரத்தப் போக்கு அதிகமானதாகக் கூறப்படுகிறது. துர்காதேவியின் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காகத் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருக்கிறார்.
பின்னர் அங்கிருந்து சேலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அங்குச் சிகிச்சை பலனின்றி துர்காதேவி உயிரிழந்தார்.