முழுசா மாறிய தெய்வானை யானை.. வியந்து பார்த்த பக்தர்கள் - என்ன பண்ணுச்சு தெரியுமா?
திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தெய்வானை தாக்கி யானை பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்த பின், வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்பட 5 குழுவினரின் கண்காணிப்பில் அந்த யானை இருந்து வந்தது. தற்போது யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. அந்த குளியல் தொட்டியில் இன்று யானை தெய்வானை உற்சாகமாக தும்பிக்கையால் தண்ணீரை பீச்சி அடித்து குளித்து மகிழ்ந்தது. பாகன் உடன் நின்று யானையை குளிப்பாட்டி உற்சாகப்படுத்தினார். முன்னதாக குடிலில் யானைக்கு நவதானிய உணவு வழங்கப்பட்டது.