எலும்பு முறிவு எனவந்தவருக்கு ஷாக் கொடுத்த எக்ஸ்ரே ரிப்போர்ட்-மருத்துவமனையில் சொன்ன காரணம்தான் ஹைலைட்

Update: 2024-11-10 06:47 GMT

தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் கையில் எலும்பு முறிவு என வந்தவருக்கு எக்ஸ்ரே ரிப்போர்ட்டை பேப்பரில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடையநல்லூரைச் சேர்ந்த காளி பாண்டி என்பவருக்கு வாகன விபத்து காரணமாக கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவருக்கு மருத்துவர் எக்ஸ்ரே எடுக்க கூறிய நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள எக்ஸ்ரே எடுக்கும் மையத்தில் எக்ஸ்ரே எடுத்துள்ளார். அவருக்கு எக்ஸ்ரே ரிப்போர்ட்டை பிலிமுக்கு பதிலாக காகிதத்தில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் காளி பாண்டி கேட்டபோது பிலிம் தீர்ந்து விட்டதாக அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் 500 ரூபாய் செலுத்தி எக்ஸ்ரே எடுத்ததாக கூறும் காளி பாண்டி, ஏழை மக்களால் இந்த தொகையை செலுத்த இயலாது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்