தன்னை விஜய்யாகவே நினைத்து தவெக மாவட்ட தலைவர் செய்த அட்ராசிட்டி - வைரலாகும் வீடியோ

Update: 2024-11-13 02:19 GMT

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய லெப்ட் பாண்டி, திறந்தவெளி காரில் ஏறி நின்று நகரை வலம் வந்தார். நூற்றுக்கணக்கான வாகனங்கள் அவரை பின்தொடர்ந்து சென்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடு ரோட்டில் கிரேன் மூலம் அவருக்கு பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் டான்சர்களையும், கட்சி தொண்டர்களையும் மேடையில் ஆட வைத்து நடுவே அமர்ந்து தன்னை விஜயாகவே அவர் பாவித்து கொண்டுள்ளார். கட்சி தலைவர் விஜய்யே எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக இருக்கும் நிலையில், மாவட்ட தலைவர் அதிகளவில் கூட்டத்தை கூட்டி கொண்டு, தன்னை கல்வி அமைச்சர் என நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்